நீல் ஆம்ஸ்ட்ராங்கின் திருமண வாழ்க்கை..!!
🚀 நீல் ஆம்ஸ்ட்ராங், 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தனது 22வது வயதில் கடற்படை சேவையில் இருந்து ராஜினாமா செய்தார். கடற்படை சேவைக்கு பிறகு, ஆம்ஸ்ட்ராங் பர்டூ பல்கலைக்கழகத்திற்கு (Purdue University) திரும்பினார். கொரியாவில் இருந்து திரும்பிய பிறகு வந்த நான்கு பருவ தேர்வுகளில் அவர் சிறந்த மதிப்பெண்களை பெற்றார்.
🚀 ஆம்ஸ்ட்ராங் 1955ஆம் ஆண்டில் வானூர்தி பொறியியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அதன்பின் அவர், கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் உள்ள ஏரோநாட்டிக்ஸ் தேசிய ஆலோசனைக் குழுவில் (NACA) அதிவேக விமான நிலையத்தில் சோதனை பைலட் ஆனார்.
திருமண வாழ்க்கை :
ஜேனட் ஷீரான் (Janet Shearon) - நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் :
🚀 பர்டூவில் படித்து கொண்டிருக்கும்போது சக மாணவியான ஜேனட் ஷீரான்-ஐ (Janet Shearon) சந்தித்தார். பின் இருவரும் 1956ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள்,
👉 மார்க் ஆம்ஸ்ட்ராங்
👉 எரிக் ஆம்ஸ்ட்ராங்
👉 கரேன் ஆம்ஸ்ட்ராங்
🚀 இதில் இவர்களது மகளான கரேன் ஆம்ஸ்ட்ராங் என்பவர் மூளை கட்டி நோயால் மூன்று வயதில் இறந்தார். அதன்பின் இவர்களது திருமண வாழ்க்கை 1994ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இந்த விவாகரத்திற்கு பிறகு நீல் ஆம்ஸ்ட்ராங், மன அழுத்தத்தில் மூழ்கினார்.
கரோல் ஹெல்ட் நைட் (Carol Held Knight) - நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் :
🚀 கணவரை இழந்த கரோல் ஹெல்ட் நைட், நீல் ஆம்ஸ்ட்ராங்கை 1992ல் கோல்ஃப் போட்டியின்போது சந்தித்தார். பின் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், இவ்விருவருக்கும் இடையே புரிதல் உண்டானது.
🚀 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1994ல் கரோல் ஹெல்ட் நைட்டை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நீல் ஆம்ஸ்ட்ராங். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. கரோலும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஓஹியோவில் இறக்கும் வரை ஒன்றாக வாழ்ந்தனர்.
Post a Comment