Salt Merchant and The Donkey(உப்பு வியாபரியும், கழுதையும்)


Once there lived a merchant. He did his business by selling salt to the people. He had a donkey to carry load and he had to cross a stream to go to other village.

Once his donkey fell into the stream the salt load and much of the salt was dissolved in water. The donkey easily crossed the stream due to the light weight of salt on his back. The donkey on his next trip knowingly fell into the stream. The merchant suspected the animal′s intention. On the next day too the donkey intentionally repeated the same trick. Its master was now sure about the animal′s evil intention.
The merchant next day loaded the donkey with a lot of cotton. The donkey once again repeated the same trick. It fell into the stream but this time its load became very heavy.
The donkey carried the heavy load. It was very tiring for it to move on. The donkey then realized it mistake and stopped falling down into the stream .It thought that it was not good to fool others.
Moral:  Don′t think to fool others. At the end, you will be the sufferer.
உப்பு வியாபரியும், கழுதையும்
வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். அவர் உப்பை சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். அடுத்த கிராமத்திற்கு செல்ல அவர் ஒரு ஓடையை கடக்க வேண்டியிருந்தது.
அவருடைய கழுதை ஒருமுறை உப்பு சுமையுடன் ஓடைக்குள் தவறி விழுந்தது. அதிகளவிலான உப்பு தண்ணீரில் கரைந்து விட்டதால் கழுதை ஓடையை எளிதாக கடந்து விட்டது. அடுத்த முறை கழுதை தெரிந்தே ஓடையில் விழுந்தது. வணிகர் அந்த கழுதையின் எண்ணத்தை சந்தேகப்பட்டார். மறுபடியும் கழுதை வேண்டுமென்றே இதே தந்திரத்தை செய்தது. வணிகருக்கு கழுதையின் தீய எண்ணம் புரிந்துவிட்டது.
அடுத்த நாள் வியாபாரி கழுதையின் முதுகில் பருத்தி மூட்டையை சுமத்தினார். கழுதை மீண்டும் அதே தந்திரத்தை செய்து, ஓடைக்குள் விழுந்தது. ஆனால் இம்முறை அதன் சுமை மிகவும் கனமாகியது.
இப்பொழுது கழுதை கனமான சுமைகளை சுமக்க வேண்டியிருந்தது. கழுதையால் நகர்ந்து கூட செல்ல முடியாமல் திணறியது. பின்னர் தன் தவறை உணர்ந்து, ஓடையில் விழுவதை நிறுத்தியது. மற்றவர்களை எப்போதும் ஏமாற்றுவது நல்லதல்ல என்றும் உணர்ந்தது.
நீதி : மற்றவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். இறுதியில், நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2