ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வதற்கான அம்சங்கள் !


 ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க தலைவராக விளங்க வேண்டுமெனில் வலுவான தாக்கம் மிகுந்த, விரும்பத்தக்க மற்றும் வெற்றிகரமான ஆளுமையை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். தன் ஆளுமையால் வலுவான தாக்கத்தை உண்டாக்கும் ஒருவரால், அதிக நபர்களை கவர்ந்திழுக்க முடியும்.

 உங்களுக்கான ஒரு வெற்றிகரமான ஆளுமையை, நீங்களும் வளர்த்துக் கொள்ளலாம். இதை சாதிக்க ஒருவருக்கு ஆர்வம், மதிநுட்பம் மற்றும் நீடித்த முயற்சி ஆகிய பண்புகள் மிகவும் அவசியம்.
 உங்களின் நடத்தை அம்சங்களை ஒரு குறிப்பிட்ட சிறந்த வழியில் மாற்றி தவறுகளை களைந்தால் வெற்றிகரமான ஆளுமையை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். அந்த அம்சங்கள் என்ன என்பதை இப்பொழுது காண்போம்.
 ஒருவரின் மிணுக்கான தோற்றம் மட்டுமே, அவருக்கான சிறப்பான ஆளுமையை கட்டமைக்க உதவாது. வேண்டுமானால், மற்றவர்களை தன்பால் கவர்வதற்கான முதல் படியாக அமையலாம்.
 ஏனெனில், முதல் அபிப்ராயம் எனப்படும் முதலாவது ஈர்ப்பே, எதிர்மறையாக போய்விட்டால் பின்னர் ஒருவரை நமக்கு சாதகமான நபராக மாற்ற மிகவும் கஷ்டபட வேண்டியிருக்கும். எனவே முதல் அறிமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
 உங்களின் புறத்தோற்றம் என்பது சிறிது அளவு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களிடம் இருக்கும் நேர்மறையான அம்சங்களை, நீங்கள் எந்த இடத்தில், எப்படி சரியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதிலேயே முதல் கட்ட கவர்தலின் வெற்றி அடங்கியுள்ளது.
 உங்களின் தனிப்பட்ட தோற்றத்தில் உடை முக்கியப் பங்காற்றுகிறது. அதற்காக, விலை உயர்ந்த, பகட்டான, நவீன நவநாகரீக உடைதான் அணிய வேண்டும் என்பதில்லை. நீங்கள் அணியும் உடை, உங்களுக்கு நன்குப் பொருந்துவதாக இருந்தாலே போதுமானது.
 அலுவலக வேலை, நேர்முகத் தேர்வு, நிகழ்ச்சிகள் போன்ற இடங்களுக்கு இடத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து செல்ல வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஏனெனில், ஒருவரின் ஆளுமையை அவரின் ஆடை பெரியளவில் தீர்மானிக்கிறது.
 சிறப்பாக உடையணிந்து விட்டாலே, நீங்கள் மற்றவர்களை கவர்ந்துவிட முடியும் என்று அர்த்தமல்ல. ஆனால், சிறப்பான உடையணிந்த ஒருவருக்கு, இயல்பாகவே தன்னம்பிக்கை பிறக்கிறது. அந்த தன்னம்பிக்கையை அவர் தனது மூலதனமாக பயன்படுத்த முடிகிறது.
 ஆனால், நேர்த்தியான உடையணியாத ஒருவர், முக்கியமான இடங்களில், தேவையான தன்னம்பிக்கையப் பெற முடிவதில்லை. எனவே, உங்களின் நோக்கத்தை அடைவதில், தடுமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.
 ஆடை மட்டுமின்றி, உங்களது காலணியும் சரியாக அமைந்திருப்பது முக்கியம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2