The Two Friends !!(இரு நண்பர்கள் !!)


Once, two friends were walking through the desert. During some point of the journey, they had an argument and one friend slapped the other one′s face.
The one who got slapped was hurt,
but without saying anything, wrote in the sand, Today my best friend slapped me in the face.
They found a river on their way, where they decided to take a bath. The one who had been slapped got stuck in the mire and started drowning, but the friend saved him. After he recovered from the drowning, he wrote on a stone, Today my best friend saved my life.
The friend who had slapped and saved his best friend asked him, After I hurt you, you wrote in the sand and now, you write on a stone, why? The other friend replied, When someone hurts us we should write it down in the sand where it can erase easily by wind and rain. But, when someone does something good for us, we must engrave it in stone where no wind can ever erase it.
Moral: We need to think about what others have done to us.
இரு நண்பர்கள் !!
இரு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த பயணத்தின் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஒரு வாதம் எழுந்து, ஒரு நண்பர் மற்றவர் முகத்தில் அறைந்து விட்டார்.
அடி வாங்கிய நபர் வருத்தப்பட்டார். ஆனாலும் அவர் எதுவும் சொல்லாமல், மணலில் இன்று என் நண்பர் முகத்தில் அடித்துவிட்டார் என எழுதினார்.
அவர்கள் சென்ற பாதையில் ஒரு நதி இருந்தது. அதில் அவர்கள் இருவரும் குளிக்க முடிவு செய்தனர். அடி வாங்கிய நபர் சேற்றில் சிக்கிக்கொண்டார். அவருடைய நண்பர் அவரை காப்பாற்றினார். அதிலிருந்து மீண்டவர், ஒரு கல்லின் மீது 'இன்று என் நெருங்கிய நண்பர் என் உயிரை காப்பாற்றினார்" என்று எழுதினார்.
நான் உன்னை காயப்படுத்திய போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை நான் காப்பாற்றியுள்ளேன் அதை ஏன் கல்லில் எழுதுகிறாய்? என்று மற்றொரு நண்பர் கேட்டார். யாராவது நம்மை காயப்படுத்துகையில் நாம் அதை மணலில் எழுதி வைக்க வேண்டும். மழையும், காற்றும் மண்ணில் எழுதுவதை சுலபமாக அழித்து விடும். ஆனால், யாராவது நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுத வேண்டும். கல்லில் எழுதி இருப்பதை, எந்தக் காற்றாலும் அழிக்க முடியாது, என்றார்.
நீதி : எப்போதும் மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை நினைக்கவேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2