இன்றைய போட்டி வாய்ந்த உலகில் நீங்கள் நினைத்த துறையில் வெற்றி பெறுவது என்பது சவாலான விஷயம்தான். அந்த சவாலில் வெற்றி பெறுவதற்கு எண்ணற்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி,மேலாளர்களும் நவீன காலத்திற்கு ஏற்ற திறமையான விண்ணப்பதாரர்களையே பணியமர்த்த விரும்புகின்றனர்.
இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள திறன்கள் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
✅ நீங்கள் விரும்பும் துறை மீதான ஆழ்ந்த புரிதல் மற்றும் அதை சார்ந்த நெறிமுறைகளை பற்றி அறிந்துக் கொள்ளுதல்
✅ விஷயங்களில் உள்ள விவரங்களை நுணுக்கமாக கவனித்தல்
✅ தெளிவான கண்ணோட்டத்துடன் பிறர் கூறும் விஷயங்களை கவனித்தல்
✅ சிறந்த எழுத்து மற்றும் வாய்மொழித் தொடர்பு திறன்கள்
✅ சிறந்த மேலாண்மை திறன்கள்
✅ மன அழுத்தத்தின் கீழ் நன்றாக வேலை செய்யும் தன்மை
✅ விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் திறன்
✅ விற்பனை சுழற்சி மற்றும் விற்பனை திறன்களை பற்றிய புரிந்துணர்வு
✅ வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் சிறந்த நேர மேலாண்மைத் திறன்
✅ தலைமைத்துவத் திறன்கள்
✅ சமூக ஊடகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
✅ தகவல்களை ஒருங்கிணைத்தல்
✅ தரவுத்தள மேலாண்மை திறன்கள்
✅ வாடிக்கையாளர் சேவை திறன்கள்
✅ சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்தும் திறன்
✅ இலக்கை அடைவதற்கு எந்த உந்துதலும் இல்லாமல் சுயமாக பணிபுரியும் திறன்
✅ மேற்கூறிய அனைத்து திறன்களை மேம்படுத்திக் கொண்டு, உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சியுங்கள்.
Post a Comment