📌 எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வு என்றால் நம் அனைவருக்குமே அதன் மீதான மோகம் இருக்கத்தான் செய்கிறது. பதவி உயர்வு என்றவுடன் அதிக சம்பளமும் அதிகாரமும் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மறந்து விட்டோம்.
பதவி உயர்வு என்பது நம் தொழில் வாழ்க்கையில் நாம் அடைந்த முன்னேற்றத்தை குறிப்பதாகும். நீங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால் பதவி உயர்வுகள் உங்களைத் தானாகவே தேடி வரும்.
📌இருப்பினும் சில சமயங்களில் நம்மில் திறமையானவர்கள் கூட தங்களது தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வு பெறாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள். எனவே, பதவி உயர்வு பெறுவதற்கான சில குறிப்புகளைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
📌நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில், உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மேல் அதிகாரியை உங்களது தொழில் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களது தொழில் வழிகாட்டலின் மூலமாக உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதோடு நீங்கள் பதவி உயர்வையும் பெறலாம்.
📌அடக்கம் என்ற நல்லொழுக்கம் நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் தொழில் வாழ்க்கையை பொறுத்தவரை நீங்கள் செய்யும் சிறந்த விஷயங்களை வெளிப்படுத்தாமல் அடக்கமாக இருப்பது தவறு ஆகும்.
📌நீங்கள் செய்த விஷயங்களை வெளிப்படுத்தி பதவி உயர்வு பெற விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
📌 நீங்கள் திறமையானவராக இருந்தாலும் கூட, பதவி உயர்வை தீர்மானிப்பதில் உங்கள் முதலாளியின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். ஆகையால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், நிறுவனத்தின் மீதான உங்கள் ஆர்வத்தையும், உங்களின் பதவி உயர்வுக்கு தடையாக இருக்கும் விஷயங்களை பற்றி பேசுங்கள்.
📌 இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பதவி உயர்வுக்கு உங்கள் முதலாளியின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
📌 அவ்வப்போது உங்கள் தொழில் துறையில் நடக்கும் விஷயங்களையும் நிகழ்வுகளையும் நீங்கள் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு புதிய திறன்களையும் உங்களது அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
📌முடிந்த வரை உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மேல் அதிகாரிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை, அவர்கள் மூலமாகக் கூட உங்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
📌 நீங்களாகவே முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களது ஆர்வத்தையும் உங்கள் நிறுவனம் முன்னேற வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தும். ஆகையால் உங்கள் மீதான மதிப்பும் உயரும்.
📌 எப்பொழுதும் தொழில் பண்புள்ளவராகவும், ஒத்துழைப்பு அளிப்பவராகவும் நடந்துக் கொள்ளுங்கள்.
📌 எப்பொழுதும் பிரச்சனையுடன் உங்கள் முதலாளியிடம் செல்லாதீர்கள். அந்த பிரச்சனைக்கான ஏதேனும் ஒரு தீர்வுடன் செல்லுங்கள். மற்றவர்களைக் காட்டிலும் பிரச்சனைக்கான தீர்வு காண்பவர்கள் எப்பொழுதும் முன்னிலைபடுத்தப் படுவார்கள்.
📌 உங்கள் நிறுவனத்தின் தேவைகளையும் சவால்களையும் அறிந்துக் கொள்ளுங்கள். பின்னர், அதற்கேற்ற திறன்கள் உங்களிடம் இருக்குமானால் அந்த பதவிக்கான விருப்பத்தை உரிய மேல் அதிகாரியிடம் தெரிவியுங்கள்.
Post a Comment