A rich man lived in a small town. One day he brought two large mangoes to home. He gave them to his servant and said, Raghu, take these to the kitchen, cut them and bring it when my friend comes. Raghu took the mangoes to the kitchen and cut them with a knife.
His master called and told to bring the mangoes.
He suddenly got an idea and replied that due to knife was blunt he could not cut the mangoes. His Master got angry and told him that he would sharpen the knife. Raghu gave him an old blunt knife and went out of home to stop master′s friend from coming.
He suddenly got an idea and replied that due to knife was blunt he could not cut the mangoes. His Master got angry and told him that he would sharpen the knife. Raghu gave him an old blunt knife and went out of home to stop master′s friend from coming.
He saw master′s friend on the way and told that the master got angry with the friend. He also told that master want to cut his ears with knife. Friend got doubt and saw through a window. He saw master sharpening the knife and ran away from there. Raghu then ran to his master and said, Master your friend has taken both the mangoes and ran away!
Master ran after his friend and shouted, Stop, Keep one of them if you like, but let me have the other one! The friend looked back and saw the master running after him with a knife, on seeing this, friend ran fastly. The master then came home and told Raghu that his friend was a greedy Man. Raghu felt relieved on hearing this.
Moral: It is always good to believe after knowing the truth.
பணக்காரர் ஒருவர் சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் தன் வீட்டிற்கு இரண்டு பெரிய மாம்பழங்களை கொண்டு வந்தார். தன் வேலைக்காரனை அழைத்து, ரகு இதை சமையல் அறைக்கு எடுத்துச்சென்று நறுக்கி வை. என் நண்பர் வரும் போது மாம்பழங்களைக் கொண்டு வா என்றார். ரகு மாம்பழங்களை சமையலறைக்கு எடுத்துச் சென்று கத்தியால் நறுக்கினான். பின்னர், அவற்றில் புளிப்புச் சுவை இல்லை என்பதை உறுதி செய்ய, அவன் ஒரு துண்டு மாம்பழத்தை சுவைத்துப் பார்த்து, மிகவும் இனிப்பாக இருப்பதைக் கண்டு இரண்டு மாம்பழங்களையும் அவனே சாப்பிட்டு விட்டான்.
அப்போது ரகுவின் எஜமான் அவனை அழைத்து மாம்பழங்களை எடுத்துவர சொன்னார். அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. எஜமானரிடம், அய்யா! கத்தி மழுங்கலாக இருந்ததால் நான் மாம்பழங்களை நறுக்கவில்லை என்றான். எஜமானர் கோபமாகி, கத்தியைக் கொண்டு வா நான் கூர்மையாக்கி தருகிறேன் என்று ரகுவிடம் கூறினார். ரகு சமையலறையில் இருந்து ஒரு பழைய மழுங்கலான கத்தியை எடுத்து வந்து தனது எஜமானரிடம் கொடுத்துவிட்டு, அவரது நண்பரை வரவிடாமல் தடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றான்.
ரகு எஜமானரின் நண்பரைப் பார்த்து, எஜமான் உங்கள் மேல் கோபமாக இருப்பதாகவும், உங்கள் காதுகளை துண்டிக்க கத்தியை தீட்டிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். சந்தேகமடைந்த நண்பர் ஜன்னல் வழியே பார்த்தபோது, எஜமானர் கத்தியை தீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு ஓடிவிட்டார். பின்னர் ரகு தன் எஜமானிடம் ஓடி, அய்யா..!! உங்கள் நண்பர் இரண்டு மாம்பழங்களையும் எடுத்துக்கொண்டு ஓடுகிறார் என்றான்.
எஜமானர் தனது நண்பரிடம், நில்.. நில்.. நீ விரும்பினால் அவற்றில் ஒன்றை வைத்துக் கொள் ஆனால் எனக்கு இன்னொன்றை தந்து விடு! என்றார். நண்பர் திரும்பிப் பார்க்கும்போது, கையில் ஒரு பெரிய கத்தியை வைத்துக் கொண்டு எஜமானர் வருவதை பார்த்து வேகமாக ஓடிவிட்டார். பின் வீட்டிற்கு வந்து, ரகுவிடம் தன் நண்பர் ஒரு பேராசைக்காரன் என்று கூறினார். இதை கேட்ட ரகு நிம்மதியடைந்தான்.
நீதி: உண்மை என்னவென்று தீர்மானித்த பிறகே அதை நம்பவேண்டும்.
Post a Comment