அரசு சொத்துக்கள் தனியாருக்கு விற்பதற்கு காரணம்?

What is the reason for selling government property to private sector?


என்ன சார் எல்லாம் தனியாருக்கா? என்ன இது எல்லாத்தையும் இந்த அரசு விக்கிது?

"நீ யூஸ் பன்னுற சிம் BSNL ஆ"

"இல்ல  வோடோபோன்"

"சரி தபால் எதுல போடுற போஸ்ட் ஆபிஸ்லயா?

"இல்ல,  professional கூரியர்ல"

"சரி உன் புள்ளைங்க எங்க படிக்கிது"

"பிரைவேட் ஸ்கூல்ல கோச்சிங் அங்க தானே இருக்கு "

"சரி வேலைக்கு எதுல போற"

"பழனி முருகன் பஸ்ல"

"சரி வீட்டுல உடம்பு சரி இல்லனா எந்த ஆஸ்பெட்டல் போவ"

"பிரைவேட் ஆஸ்பெட்டல் தான்  டிரீட்மென்ட நல்லா இருக்கனும் இல்ல "

"வீட்டுல DD சேனல் பாப்பியா "

"அதுல  என்ன இருக்கு சன்.. ஜீ தமிழ்..விஜய் டிவி தான் பார்ப்பேன்"

"வீட்டுல அரசு கேபிள்தானே வச்சிருக்க"

"airtel dish வச்சிருக்கேன்"

"சரி பொழுது போக எங்க போவ"

"சினிமா, ஷாப்பிங்மால் போவேன் "

"வீட்டுல சாப்பாடு செய்யலன்னா ஹோட்டல் போவீயா ?

"எதுக்கு சுகி இருக்கு ஜோ மேட்டோ இருக்கு இல்ல சொன்னா கொண்டு வந்து தராங்க "

"வண்டிக்கு பெட்ரோல் எங்க போடுற "

"ரிலையன்ஸ் பங்குல போட்டா பாயின்ட் கிடைக்கும் அங்க தான் போடுவேன்"

"தீபாவளிக்கு கோ ஆப்டெக்ஸ்ல துணி எடுப்பியா"

"ச்சே சே, சென்னை சில்க்ஸ், சாரதாஸ் லதான் எடுப்பேன்"

"கால்ல போட்டிருக்கும் செருப்பை கதர் கடையிலதானே வாங்குன"

"No No, BATA show room ல"

"ரேசன்ல என்ன வாங்குவ"

"சக்கரை மட்டும் தான் மத்த பொருள் எல்லாம் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல பாயின்ட் கொடுத்து கிப்ட் தரான்"

*மொத என்ன கேள்வி கேட்டா*

"எல்லாம் தனியாருக்கு ஏன் விடனுமுனு கேட்டேன்"

அரசு நடத்தும் எதையும் பயன்படுத்துவதில்லை. தனியார் நடத்துவதைத்தான் பயன்படுத்துவ.

பின்பு அரசு துறைகளை தனியாருக்கு விறகாமல் என்ன செய்வார்கள்...

சிந்திப்பீர் செயல்படுவீர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2