உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர்


ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்கச் சென்றனர்.

அதில் ”உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்; அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

'நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும்...?' என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். 

சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராகச் செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க 'நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்... நல்ல வேளை அவன் இறந்துவிட்டான்' என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது...

நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்!

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2