நீங்கள் பணிபுரியும் இடத்தை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது?


👉 நாம் ஒரு நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலோ அல்லது சக ஊழியர்களில் ஒருவராகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமெனில் நாம் பணிபுரியும் சூழலானது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
 நாம் பணிபுரியும் இடத்தை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.

மகிழ்ச்சியாக பணிபுரிதல்:
 👉பொதுவாக நாம் ஒரு பணிக்கு செல்கிறோம் என்றால் வேலைப்பளு என்பது பணி இடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த வேலைப்பளுவை சுமையாக கருதாமல் அதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணிபுரிய வேண்டும். அப்பொழுதுதான் உங்களது திறனை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
 👉ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதுதான் உங்களின் முழுமையானத் திறன் வெளிப்படும்.

போட்டிக்கு அப்பாற்பட்டு செல்லுதல் :
 👉ஒருவருடன் போட்டியிடும் பொழுது, அவரைவிட ஒருபடி முன்னே செல்ல வேண்டும் என்றுதான் எண்ணுகிறோம். ஆனால் நம்முடைய உண்மையான திறமைகளை வெளிப்படுத்த தவறிவிடுகிறோம்.
 👉நாம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் தான் நாம் நன்றாக சிந்தித்து செயல்பட முடியும். அப்பொழுதுதான், உங்களுடைய எல்லாத் திறமைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியும்.

தன்னார்வ கலையை கற்றுக்கொள்ளுங்கள் :
 👉தன்னார்வம் என்பது அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் விருப்பத்துடன் நடந்துக்கொள்வது ஆகும்.
👉 நீங்கள் பணி இடத்தில் எப்போதும் தன்னார்வத்துடன் இருக்க வேண்டும்.
 👉அவ்வாறு இருப்பதால் நீங்கள் செய்யும் பணிகள் உங்களுக்கு மிக எளிமையாகவும் ஆர்வம் மிகுந்ததாகவும் மாறிவிடும்.

உங்களுடைய சக ஊழியர்களிடமிருந்து சிறந்ததை பெறுங்கள் :
👉நீங்கள் தலைமை பொறுப்பில் இருந்தாலும் சரி அல்லது சக ஊழியர்களுள் ஒருவராக இருந்தாலும் சரி, உங்களை சுற்றி உள்ளவர்கள் செய்யும் செயல்கள் திறமையாக இருந்தால் அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
 👉அதே போல், நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நட்புறவை பாராட்ட வேண்டும். அப்பொழுதுதான் நாம் பணிபுரியும் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2