ஆதார் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படும். ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது ஆகும்.
இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை, செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இணைப்பு :
இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
யுஐடிஏஐ :
மேலும் கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள யுஐடிஏஐ வலைதளத்தில் பார்க்க முடியும். குறிப்பாக இந்த வலைதளத்தில் புகார் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இணையதளம் உதவுகிறது.
ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிவதற்கான வழிமுறைகள் :
📲 முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் சாதனங்களில் என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
📲 அடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டினை அந்த வலைதளத்தில் உள்ளிடவும்.
📲 அதன்பின்பு ஒடிபி-ஐ பெற அந்த வலைபக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும், பின்பு உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு அந்த ஒடிபி அனுப்பி வைக்கப்படும்.
📲 பின்னர் அந்த வலைதளத்தில் ஒடிபி-ஐ உள்ளிட வேண்டும். அடுத்து கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்க முடியும்.
Post a Comment