மென் திறன்கள் பற்றிய தகவல்கள் !

Articles

Ads1

 ஒருவரின் ஆளுமைத் தன்மையை தீர்மானிப்பதில் மென் திறன்கள் (சாப்ட் ஸ்கில்) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், ஒருவரின் எண்ணங்களுடன் இந்த மென் திறன்கள் நேரடியாகத் தொடர்புடையது. ஆகையால், மேலாளர்கள் நேர்காணலில் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன்பு இந்த மென் திறன்களை விண்ணப்பதாரர் பெற்றிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மென் திறன்கள் என்ன என்பதை பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.

தகவல் பரிமாற்றம் : 

🌟 சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான நேரத்தில், சரியான விதத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும்.

உடல் மொழி : 

🌟 உடல் மொழி என்பது ஒருவரின் உடல் அசைவுகளுடன் நேரடியாக தொடர்புடையது. இது ஒருவரின் உண்மையான நிலையை அதிக அளவில் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டது. ஆகையால் பிறருடன் பேசும்போது ஒருவரின் உடலுக்கு ஏற்ற அசைவுகளுடன் பேசுவது சிறப்பாகும்.

எழுத்து தகவல் பரிமாற்றம்: 

🌟 தகவல்களை எழுத்துப் பூர்வமாக பரிமாறும் பொழுது தோற்றம், இலக்கணம், நடை, அளவு போன்ற பல்வேறு காரணிகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

பிரசன்டேஷன் ஸ்கில் : 

🌟 ஒரு விஷயத்தை தொகுத்து வழங்கும் போது சரியான திட்டமிடலுடன் தகவல்களை நன்றாக தயாரித்து, தெளிவாக வழங்க வேண்டும்.

குழுவாக பணிபுரிதல் : 

🌟 ஒரு இலக்கை அடைவதற்கு, குழுவில் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தனி நபர் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒரே அணியாக பணிபுரியும் திறன் இருக்க வேண்டும்.

கொள்கைகளைக் கடைபிடித்தல் :

🌟 பணிபுரியும் சூழலில் எப்பொழுதும் தொழில் குறித்த சிந்தனையோடு பணிபுரிய வேண்டும். நமது சுய விருப்பு வெறுப்புகளையும், இதர சிந்தனைகளையும் முற்றிலும் களைய வேண்டும்.

🌟 மேலும், சக பணியாளர்களுடன் ஒன்றி நடக்க வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தகவல் பரிமாற்றம் செய்து பணிபுரிய வேண்டும்.

நேர மேலாண்மை:

🌟 குறிப்பிட்ட கால அளவிற்குள், நேரத்தை சரியாக பயன்படுத்தி கொடுத்த பணியை முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேலையின் விளைவாக ஏற்படும் பளுவையும், மன உளைச்சலையும் நன்றாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும்.

🌟 இத்தகைய மென் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே நமது தொழில் வாழ்க்கையை வளமாக்க முடிவதோடு, கிடைத்த பணியிலும் முன்னேற்றம் காண முடியும்.

Ads2

Post a Comment

Previous Post Next Post