நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நிலவு பயணம்..!!
👨🚀 நீல் ஆம்ஸ்ட்ராங், 1962ஆம் ஆண்டு National Advisory Committee for Aeronautics அமைப்பின் விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், பொறியியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மேலும், இந்த அமைப்பின் கமாண்டு பைலட்டாகவும் பணியாற்றினார். பல அதிவேக விமானங்களை சோதனை செய்தார்.
ஜெமினி - 8 விண்கலம் :
👨🚀 1962ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் இணைந்தார். 1966ஆம் ஆண்டு ஜெமினி - 8 விண்கலத்தில் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
👨🚀 இவர் ஜெமினி - 8 விண்கலத்தை ஜெமினி அஜினா என்கிற விண்கலத்துடன் இணைத்தார். ஜெமினி அஜினா என்பது ஒரு ஆளில்லாத விண்கலமாகும். இவர் இரண்டு விண்கலத்தையும் ஒன்றுடன் ஒன்றை இணைத்தார்.
👨🚀 இதன் மூலம் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த இணைப்பின் பலன் என்பது மனிதன் நிலவிற்கு செல்வதற்கும் அடித்தளமாக அமைந்தது.
👨🚀 இதனைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி மையம் நாசா, நிலவிற்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சியில் முழுவீச்சில் இறங்கியது. நிலவிற்கு மனிதர்கள் செல்லும் செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
அப்பல்லோ திட்டம் :
👨🚀 1969 முதல் 1972 வரை மனிதர்களை சந்திரனில் தரையிறக்குவதில் வெற்றிபெற்ற தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) மேற்கொண்ட மூன்றாவது அமெரிக்க மனித விண்வெளிப் பயணத் திட்டமே அப்பல்லோ திட்டம்.
👨🚀 விண்வெளி வீரர் சந்திரனில் தரையிறங்குவதையும், பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதையும் நோக்கமாகக் கொண்ட அமெரிக்க விண்வெளித் திட்டமே அப்பல்லோ திட்டம்.
👨🚀 எண்ணற்ற விண்வெளி பொறியியல் சிக்கல்களை தீர்க்க ஒரு பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக விண்கலம், ராக்கெட்டுகள், சர்வேயர் திட்டம் மற்றும் லூனா ஆர்பிட்டர் திட்டம் போன்றவை தயாரிக்கப்பட்டன.
Post a Comment