நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கடற்படை சேவைகள்..!!
🚀 1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தளமான புளோரிடாவில் உள்ள பென்சாக்கோலாவிற்கு (Pensacola) அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற அழைப்பு தான் அது.
🚀 1949ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ல் மருத்துவ பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் மிட்ஷிப்மேன் ஆனார். அதன்பின் விமானப் பயிற்சி வடஅமெரிக்க எஸ்.என்.ஜே பயிற்சியாளரால் நடத்தப்பட்டது.
🚀 இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது. அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமானம் இயக்குவதற்கு தகுதி பெற்றார்.
🚀 1950ஆம் ஆண்டு 20வது வயதில், ஆம்ஸ்ட்ராங் கடற்படை விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. 1950ல் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவரது தாயும், சகோதரியும் கலந்து கொண்டனர்.
🚀 தனது முதல் பணியாக கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7ல், NAS சான் டியாகோவில் ஆரம்பித்தார். பின் இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார்.
🚀 1951ஆம் ஆண்டில் F9F-2B பாந்தர் விமானத்தில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார். அதன்பின் எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது.
🚀 ஆகஸ்ட் 29, 1951ல் ஆம்ஸ்ட்ராங் கொரியப் போரில் சாங்ஜின் மீது ஒரு புகைப்பட உளவு திட்டத்தின் துணை விமானியாக பங்கேற்றார். ஐந்து நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 3-ம் தேதி, வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானத்துடன் அவர் பறந்தார்.
🚀 சுமார் 350 mph (560 km/h) வேகத்தில் சென்று சிறிய குண்டு வீசும் போது, ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த அவரின் பாந்தர் விமானம்; வலது இறக்கை துண்டிக்கப்பட்டு சுமார் 20 அடி உயரத்தில் ஒரு முனையில் மோதியது. அப்போது அவரது விமான பள்ளி தோழர் ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்றினார்.
🚀 ஆம்ஸ்ட்ராங் 20 போர் நடவடிக்கைளுக்காக விமானப் பதக்கம், இரண்டு தங்க நட்சத்திரம், கொரிய சேவை பதக்கம், தேசிய பாதுகாப்பு சேவை பதக்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கொரியா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.
Post a Comment