நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை வரலாறு..!!

 நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை வரலாறு..!!


🚀 நீல் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி, ஐக்கிய அமெரிக்காவில் ஓஹியோவில் உள்ள வாபகோனெட்டா (Wapakoneta) என்ற இடத்தில் ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.


🚀 இவருக்கு ஜூன் என்ற ஒரு இளைய சகோதரி, மற்றும் 


🚀 டீன் என்ற ஒரு இளைய சகோதரர் ஆகியோர் உள்ளனர்.


🚀 நீல் ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக (ஆடிட்டர்) பணிபுரிந்தார். அதனால் அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில்; வசித்து வந்தனர்.


🚀 ஆம்ஸ்ட்ராங்கிற்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு (Cleveland Air Races) அழைத்து சென்றார். அந்த சாகசங்களை பார்த்ததில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு பறக்கும் ஆசை வளர தொடங்கியது.


🚀 நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஐந்து வயதாக இருக்கும்போது, ஜூலை 20ஆம் தேதி, 1936 ஆண்டு ஓஹியோவில் தனது முதல் வான்வெளி பயணத்தை தனது தந்தையுடன் மேற்கொண்டார்.


🚀 ஆம்ஸ்ட்ராங் பூளும் உயர்நிலைப்பள்ளியில் (Blume High School) தனது ஆரம்பக்கால படிப்பை தொடங்கினார். மேலும் வாப்கோநெட்டா விமான நிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார்.


🚀 பின் அவர் தனது 16வது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமமும் பெற்றார். 1947ஆம் ஆண்டில் 17வது வயதில் ஆம்ஸ்ட்ராங் பர்டூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) வானூர்தி பொறியியலை படிக்க தொடங்கினார். இவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இவர் இருந்தார்.


🚀 பின்னர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தை பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமான நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணிபுரிந்தார்.


🚀 தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவில் அவர் 900-த்திற்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார். பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது பட்டப்படிப்பை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2