சிகரெட் மற்றும் புகையிலையால் என்ன நேரும் ?
👽 புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை.
👽 ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.
👽 புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதை அடிமை நோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
விளைவுகளை தவிர்க்க சில வழிகள் :
💀 புகைபிடிக்க மற்றும் புகையிலை உண்ண நினைக்கும் போது தண்ணீர் குடிப்பது அல்லது பபுள்காம் மற்றும் கேரட் போன்ற பொருட்களை உண்பதினால் புகை பிடிக்கும் எண்ணத்தை மாற்றலாம்.
💀 நாம் செய்யும் வேலையை மிகவும் ஆர்வத்துடன் திறமையுடன் செய்யும்பொழுது புகை பிடிப்பதில் இருந்து நம் எண்ணங்களை மாற்றலாம்.
💀 உங்கள் நண்பர் புகைபிடிக்கும் போது விலகி இருக்கவும்.
💀 தகுந்த மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனையும் பெற்று இதனை தவிர்க்கலாம்.
கருத்து கணிப்புகள் :
இன்று பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.
கருத்துக்களும் ஆய்வுகளும் :
✍ உலக சுகாதார மையம் கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.
✍ புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.
✍ புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர்.
✍ யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
''ஒவ்வொரு இழுப்பின் முடிவிலும்
உனக்கு மட்டும் அல்ல
மற்றவர்களுக்கும் சேர்த்துதான்
கல்லறை கட்டிக்கொண்டிருக்கிறாய்"
Post a Comment