வாட்ஸ்அப் இதை அறியாதவர்கள் எவருமில்லை 2009ஆம் ஆண்டு முதல் முதலில் தன் சேவையை தொடங்கியது. மற்றவர்களை எளிதாக மற்றும் விரைவாக தொடர்பு கொள்வதற்காக எழுத்து வடிவில் உருவாக்கப்பட்ட வாட்ஸப் வாட்ஸப் செயலியானது இன்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியானது இல்லாத எந்த ஒரு கைப்பேசியும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் கைபேசி எப்படி நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆனதோ அதுபோன்று வாட்ஸ்அப் செயலி கைபேசியின் ஓர் அங்கம் ஆனது. கண் மூடுவதும் கண் திறப்பது வாட்ஸ் அப்பில் தான் இது மிகவும் தவறு ஆனால் இதிலும் நன்மை உண்டு.
வாட்ஸ்அப் இல்லாத எந்த ஒரு கைப்பேசியும் நாம் காண முடியாது இந்த 11 வருட காலத்தில் வாட்ஸ்அப் எத்தனையோ அப்டேட் வந்துள்ளது அதில் மிகவும் முக்கியமானது தற்போதுள்ள ஸ்டேட்டஸ் வியூ நாம் பகிரும் போஸ்ட் ஆனது 24 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும் பிறகு தானாக அழிந்துவிடும்.
நம் கான்டாக்ட் லிஸ்டில் குறைந்தபட்சம் 350 நபர்களின் போன் நம்பர் ஆவது இருக்கும் அவற்றில் 250 பேர் ஆவது வாட்ஸ் அப்பில் நமது ஸ்டேட்டஸை பார்ப்பார்கள் ஆனால் நாம் அவர்களிடம் பேசி பல நாட்கள் ஏன் வருடங்கள் கூட இருக்கலாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அந்த உறவுகளுக்கு உயிர் கொடுக்கலாம்.
அதற்கான செயல் மிகவும் சிறியது
உங்கள் தொடர்பில் உள்ள நபர் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கும்பொழுது அதுபற்றிய உங்கள் நல்ல கருத்துக்களை கூறுங்கள். அப்பொழுது உங்களுக்கு இடையேயான ஒரு உரையாடல் தொடரும் இதன் மூலம் உங்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்து உங்கள் உறவு பலப்பட தொடரும்.
Post a Comment