இன்றைய வேலை சந்தையில், நீங்கள் நேர்காணலுக்காக எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் சரி உங்களின் தகுதி, திறமை மட்டும் போதுமானதாக கருதப்படுவதில்லை. அதையும் தாண்டி உங்களிடம் பல்வேறு வகையான தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த பல்வேறு வகையான தகுதிகள் என்று கூறப்படுபவை இந்த மென்திறன் தான். நம்மிடம் பல்வேறு மென்திறன்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
முக்கியமாகக் கருதப்படும் சில மென்திறன்கள் பின்வருமாறு :
🏆 குழுவாக பணியாற்றும் போது பிறரிடம் எளிதாக நட்பு கொள்ளுதல்
🏆 குழுவில் இணைந்து செயல்படும் பொழுது குழு உணர்வுடன் செயல்படுதல்
🏆 பிறர் மனதை கவரும் விதத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுதல்
🏆 எளிமையான மற்றும் தீர்க்கமான உடல் மொழியை பயன்படுத்துதல்
🏆 அனைவரையும் ஈர்க்க வைக்கும் உரையாடல் திறன்
🏆 எந்த விஷயத்தையும் உறுதியுடன் பார்க்கும் மனப்பாங்கு
🏆 பிறருக்கு ஊக்கமளித்து, தானும் ஊக்கத்துடன் செயல்படுதல்
🏆 எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் மேலாண்மைத் திறன்
ஆனால், ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்க தேவைப்படும் அனைத்துமே மென்திறன்கள் தான். அவ்வாறு மேற்கூறியவற்றை தவிர்த்து, மென்திறன்களின் சில முக்கிய அம்சங்களாக கருதப்படுபவை பின்வருமாறு :
🏆 நேர்மை
🏆 நம்பகத்தன்மை
🏆 இலகுத்தன்மை
🏆 சிறப்பாக எழுதும் திறன்
🏆 நிர்வாகத்திறன்
🏆 கற்றுக் கொள்ளும் ஆர்வம்
🏆 பொது அறிவு
🏆 சிறப்பான தோற்றம்
🏆 இந்த குணங்களும், திறன்களும் அனைவரிடத்திலும் இருப்பது கடினமான ஓர் விஷயம்தான். ஆனால், இந்த திறன்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்கினாலே நீங்கள் வெற்றியின் பாதையில் பயணிக்கலாம்.
Post a Comment