கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி? (How to handle the critical situation)

 
நாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் நமது வாழ்க்கையில் அவ்வப்போது ஏதேனும் தொல்லைகளோ அல்லது பிரச்சனைகளோ தலை தூக்கத்தான் செய்கிறது. ஆனால் பிரச்சனைகளை சமாளிக்கும் விதம் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு வேறுபடுகிறது. இது அவரவர்களுடைய ஆளுமையை பொருத்தது ஆகும்.

📝 சிலர் தெளிவற்ற மனநிலையில் குழப்பத்துடன் இருப்பார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டாலே போதுமானது என்று அவர்களுக்கு தோன்றும்.

📝 ஆனால் சிலர், இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளாமல் அந்த பிரச்சனையை எளிதாக கையாளுவார்கள்.

📝 இவ்வாறு அலட்டிக் கொள்ளாமல் பிரச்சனையை சமாளிப்பதற்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம். 

எதிலும் நம்பிக்கை :

📝 நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும்.

📝 இது என்னால் செய்யக்கூடிய விஷயம்தான் என்ற நம்பிக்கை எப்போதும் மனதில் பதிந்திருக்க வேண்டும்.

📝 நமக்குள் திறன் இருக்கிறது என்ற நம்பிக்கையும், நம்மை பற்றிய நேர்மறையான எண்ணமும் பிரச்சனைகளை சமாளிக்க போதுமான தைரியத்தை அளிக்கிறது.

உயர்வாக எண்ணுதல் :

📝 நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை என்று நம்மை பற்றிய உயர்வான எண்ணம் இருக்க வேண்டும்.

பிரச்சனையை பெரிதாக கருதுவதில்லை :

📝 தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை என்ற எண்ணம் இருக்க வேண்டும். நீங்கள் பிரச்சனையை கையாளுகிறீர்களா அல்லது பிரச்சனை உங்களைக் கையாளுகிறதா என்பதில் தெளிவாக இருங்கள்.

📝 ஒரு வேளை நீங்கள் பிரச்சனையை கையாளுகிறீர்கள் என்றால் எண்ண அலைகளில் குழம்பி தவிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.

தடுமாறாமல் செயல்படுதல் :

📝 நமது முயற்சிக்கு நல்ல விளைவுகளே ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல் நம்மை தடுமாற்றம் இல்லாமல் செயல்பட வைக்கிறது.

நேர்மறையாக எதிர்க்கொள்ளுதல் :

📝 ஒரு விஷயத்தை எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களுடன் எதிர்க்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த விஷயத்தை வெற்றிக் கொள்ள முடியும்.

📝 மேற்கூறிய தகுதிகள் இருந்தால் நீங்கள் சிறந்த ஆளுமையைக் கொண்டவர்தான். ஒருவேளை உங்களிடம் இந்த தகுதிகள் இல்லை என்றால் இவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2