மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் எவ்வளவோ முயற்சி செய்கிறோம். இருப்பினும் நாம் அந்த முயற்சியில் தோல்வி அடைகிறோம். அதற்கான காரணம் என்ன என்பதை அறிவீர்களா? அதற்கான காரணம், நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகள்தான்.
நம் அனைவரின் மகிழ்ச்சிக்கும் மாபெரும் தடையாக இருப்பது நமது கடினமான கடந்த கால சிந்தனைகளைப் பற்றி அவ்வப்போது நினைவுகூர்ந்து கொண்டே இருப்பதுதான். அவற்றை மறக்காமல், மனதில் சேர்த்துக் கொண்டே இருப்பதனால்தான் மகிழ்ச்சியை இழக்கிறோம்.
உங்கள் திறமைக்கும் படிப்பிற்கும் தகுதியான வேலையைத் தேடி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். அரசாங்க வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து துறைகளிலும் உள்ள காலிபணியிடங்களை வீட்டிலிருந்தே அறிந்துகொள்ள நமது நித்ராவின் இலவச வேலைவாய்ப்பு செயலியை
இங்கே கிளிக் செய்து உடனே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் !!!
நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்து புன்னகைக்கும் போதுகூட, நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்துகொண்டாரே? என்ற கடந்த கால நினைவு நம்முள் நினைவுக்கு வருகிறது. ஆகையால், அவரை கண்டு புன்னகைக்க கூட ஆலோசனை செய்கிறோம். இவ்வாறு சிந்தித்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியமற்றதாகும்.
அவரோடு நம்மால் இயல்பாக பழகமுடிவதில்லை. செயற்கையாக புன்னகைத்து அவருடனான நட்பை நாமே துண்டித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி, நினைவாற்றலை மேம்படுத்தும் முயற்சியில் தேவையானவற்றை தவிர்த்துவிட்டு, தகுதியற்றவற்றை சேர்த்துக் கொள்கிறோம். இதை நாம் தவிர்க்க வேண்டும்.
நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும்.
வருத்தம் வரும்போதெல்லாம், நமது கடந்த காலத்தை நினைத்து நினைத்து பெரிதாக்குவதைவிட, அதை ஒருவருடன் பகிரும் பொழுது நமது வருத்தம் பாதியாக குறைகிறது. மேலும், மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துவதற்கும் முன்னேறி செல்வதற்கும் நமக்கு உதவுகிறது.
Post a Comment