பணிச்சூழலில் உங்களது கவனச் சிதறலை எவ்வாறு தடுப்பது?


✓ பணி சூழலில் நடக்கும் பல்வேறு விஷயங்களால் நமக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, நாம் நினைத்த இலக்கை அடைய முடியாமல் தள்ளிப்போடுகின்றோம். இதனால் நமது செயல் திறனை குறைத்து மதிப்பிடப்படுவதோடு இல்லாமல், நம்மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்துவிடுகிறது.

✓ சக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை, பாடல் கேட்டுக் கொண்டே பணிபுரிவது, நண்பர்களுடனான கூட்டணி போன்ற விஷயங்கள் எது வேண்டுமென்றாலும் கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கலாம். இத்தகைய கவனச்சிதறலில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.

கவனச்சிதறலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் :

✓ முதலில் உங்கள் கவனம் எதனால் சிதறுகிறது என்பதை நீங்கள் ஆராய வேண்டும். காரணங்களை கண்டறிந்தால் தான் அதற்கான தீர்வுகளை காண முடியும்.

✓ அலுவலகத்தில் இன்றைய நாள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன்னதாகவே நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதாவது இன்றைய நாளில் என்ன விஷயங்களை செய்ய வேண்டும் அல்லது எதை முதலில் முடிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இலக்குகளை அடைய தீர்மானத்துடன் செயல்படும்பொழுது நமது கவனச்சிதறல் குறையும்.

✓ காலை நேரங்களில் சாப்பிடும் பழக்கம் இன்று பலரிடம் இல்லை. ஆனால், இது தவறு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வது, நமக்கு ஆற்றலை தருவதோடு இல்லாமல் கவனத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

✓ தியானமானது, கவனம் சார்ந்த மூளை செயல்பாடுகளை அதிகரிக்க வல்லது. இதனால், நமது கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டு நமது செயல்திறன் அதிகரிக்கிறது.

✓ வேலை நேரத்தின் பொழுது, நமது அதிகப்பட்சமான கவனச்சிதறலுக்கு காரணமாக இருப்பது மின்னஞ்சல், சமூக வளைதளங்கள் மற்றும் அலைப்பேசியை பயன்படுத்துவது ஆகும். தேவையற்ற நேரங்களில் இவற்றை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

✓ ஒரே சமயத்தில், எண்ணற்ற தகவல்களை கையாளுவதால் நமது மூளையின் செயலாக்கம் மழுங்கிவிடுகிறது. ஆகையால், பெரிய திட்டங்களில் பணிபுரியும் பொழுது, அவற்றை சிறிய பாகங்களாக பிரித்து கையாளும் பொழுது நமது மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். இதனால், கவனச் சிதறல் குறைந்து உங்களால் நன்றாக பணிபுரிய முடியும்.

✓ ஒரு வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடித்தாக வேண்டும் என்று காலவரையறையை நிர்ணயித்து பணிபுரியுங்கள்.

✓ நீங்கள் பணிபுரியும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், மேஜையின் மேல் இருக்கும் ஒழுங்கற்ற பொருட்களோ அல்லது சுத்தமின்மையோ உங்களை எரிச்சலூட்டலாம். அதனால் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

✓ ஒன்றுபோல தினந்தோறும் பணிபுரிவது கடினம்தான். ஆகையால் தேவைப்படும் பொழுது சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

✓ இடைவேளைகளில், தேனீர் அல்லது காப்பி அருந்துவது கூட உங்களுக்கு புத்துணர்ச்சியை பெற்றுத்தரும்.

✓ மற்றவர்கள் உங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கு காதொலிப்பானை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் மேஜையின் மேல் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பது போன்று குறிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

✓ ஒரு இலக்கை அடைந்தவுடன் உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து, மீண்டும் ஆர்வத்துடன் பணிபுரிய உதவியாக இருக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2