What you need to know before buying tablet.?
நாம் என்ன தான் நலமாக இருப்பது போல் தோற்றமளித்தாலும் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கு உள்ளாகின்றோம். அந்த நோய்களுக்கு மருந்து எடுத்து குணப்படுத்துவதென்பது தற்போது கொஞ்சம் யோசிக்கத்தக்க விஷயமாக மாறிக்கொண்டு வருகின்றது. மருந்து வாங்கும் போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
உரிமம் :
மருந்து வாங்க நினைத்தால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடை என்று தெரியாமல் இருந்தால் அந்த கடையின் விற்பனை ரசீதுச் சீட்டு அல்லது போர்டில் உரிமையாளரின் விவரங்கள் போட்டிருக்கும். அதைக்கண்டு விவரங்கள் அறிந்து வாங்க வேண்டும்.ரசீதுச் சீட்டு :
மருந்துகள் மட்டும்மிலாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் ரசீதுச் சீட்டு மிகவும் முக்கியமானது. மருந்துகள் வாங்கியதும் அதற்கான விற்பனை ரசீதைக் கேட்டு வாங்குங்கள். அது நீங்கள் வாங்கும் மருந்துக்கு உத்தரவாதமாக இருக்கும்.
உற்பத்தி தேதி :
எந்த ஒரு பொருளை வாங்கினாலும் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கண்டிப்பாக பார்த்து தான் வாங்க வேண்டும். காலாவதியான பொருட்களை பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்கப்படும். மருந்துகள் வாங்குவதற்கு முன், அதில் அச்சிடப்பட்டுள்ள உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் நம்பர் ஆகியவற்றை கவனியுங்கள். இது மிக மிக முக்கியம்.
விலை :
மருந்தின் விலை, ரசீதில் குறிப்பிட்டுள்ள விலை என இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும்.
எங்கு வைக்க வேண்டும்?
மருந்துகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு வைக்க வேண்டும், எந்த தட்பவெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாங்கும் மருந்துகளை நீங்கள் மட்டுமே உபயோகியுங்கள். அதே போன்ற பிரச்சனை உள்ளது என்று நீங்களே யாருக்கும் அந்த மருந்துகளை கொடுக்காதீர்கள், அது ஆபத்தில் முடியலாம்.
Post a Comment