"வாழைப்பழம் விலை எவ்வளவுங்க"
அந்த பெண் கேட்டாள்.
"ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய்ம்மா?"
என்றார் முதியவர்.
"சரி, ஆறு வாழைப்பழங்கள் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.
"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க.... காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே.
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்" என்றார் முதியவர்.
தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்!!!
பில் தொகை 1200/-, அவள் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள்.
ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பழம் விற்ற முதியவருக்கு வலி மிகுந்த விஷயம்,
"இதில் உற்றுநோக்க வேண்டியது"
நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!
நாம் மாறுவோம்..
நல்ல மாற்றத்தினை உருவாக்குவோம்...
Post a Comment