கொஞ்சம் சிரிங்க பாஸ்..1


சிரிக்க மட்டுமே !!

ஆசிரியை : என்னடா இது கணக்கு நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதிக்கிட்டு வந்திருக்க?
மாணவன் : நீங்க தானே டீச்சர் சொன்னிங்க?
ஆசிரியை : நான் எப்போடா சொன்னேன்.
மாணவன் : நேத்து சாயந்திரம்.. எல்லோரும் வீட்டுக் கணக்கை ஒழுங்கா எழுதிக்கிட்டு வாங்கன்னு சொன்னீங்களே? மறந்துட்டீங்களா?

*******************************************


நபர் - 1 : அங்க குட்டை முடியோட, சிவப்பு சட்டையும், நீல ஜீன்ஸஷுமா ஒரு பையன் நிக்கறானே தெரியுதா?
நபர் - 2 : அது பையன் இல்ல என் பொண்ணு.
நபர் - 1 : மன்னிச்சிடுங்க சார்! நீங்கதான் அவ அப்பான்னு தெரியாது.
நபர் - 2 : நான் அவ அப்பா இல்லை. அம்மா!
ஆசிரியர் : என்னாச்சு பப்பு? ஏன் லேட்?
பப்பு : நான் ஸ்கூலுக்கு வர்ற வழியில ஒருத்தர் நூறு ரூபாயைத் தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருந்தாரு.
ஆசிரியர் : நீயும் அவரோட சேந்து தேடுனதால லேட்டாயிடுச்சா?
பப்பு : இல்லை டீச்சர்! அந்த நூறு ரூபாய் என் காலுக்கு அடியிலதான் இருந்துது. அதனாலதான் லேட்டாச்சு.

*******************************************

வாழ்க்கை தத்துவம் !!
கணவனை கடவுளாகவும் மனைவியை மதிமந்திரியாகவும் நினைத்து வாழும் குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்.

*******************************************

ரூபா நோட்டு கதை !!
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் மதி எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் மதி சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த மதி தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனின் நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த மதி தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் மதிக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர். மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.
இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர். கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், கசங்கி இருந்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் மதி சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின் மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது, அதனால் மதியின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக மதியை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் மதியிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2