வங்கி கடன் பெற ஒருவர் நினைத்து விட்டால், வங்கியின் குறைந்த வட்டி விகிதத்தை தவிர கடனுக்கான நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பரிசீலித்து பார்க்க வேண்டும்.
முக்கியமான அம்சங்கள் :
வீட்டுக்கடன், வாகன கடன் என எந்த
வகையான கடன் பெறுவதாக இருந்தாலும், கடன் தொடர்பான அனைத்து முக்கியமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் கடன் வாங்குவதற்கான தேவை, கடனை திருப்பி கட்ட முடியுமா? நம்முடைய நிதி சூழல் ஒத்துழைக்குமா? இது போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும். வட்டி :
பொதுவாக கடன் வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கும் போது, வட்டி விகிதத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். எல்லா வங்கிகளிலும் கடன் கொடுக்கிறார்கள். எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்றும் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் அதிக நிதி பரிவர்த்தனை மேற்கொள்ளும் வங்கியில் உங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும்.
வருடாந்திர விகிதம் :
வங்கிகள் அளிக்கும் வருடாந்திர வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் மாதத்தவணையை தேர்வு செய்தால், அதனை உரிய காலத்தில் செலுத்த தவறினால், விதிக்கப்படக்கூடிய அபராத தொகையையும் அறியவேண்டும்.
வங்கிகளில் நிபந்தனைகள் :
கடனை தேர்வு செய்யும் போது, மாறும் வட்டி விகிதமா? மாறாத வட்டி விகிதமா? என்று பரிசீலிக்க வேண்டும். வட்டி விகிதம் மாறும் என்ற சூழ்நிலையில் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்வது அவசியம்.
ஜீரோ இ.எம்.ஐ :
வங்கிகள் அளிப்பதாக சொல்லும் ஜீரோ இ.எம்.ஐ., செயல்முறை கட்டணம் தள்ளுபடி தொடர்பான எழுத்து நிபந்தனைகளை கவனிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் பரிசலிப்பது நல்லது :
கடனுக்கான ஈர்ப்புடைய விஷயங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த நோக்கில் செலவு குறைந்ததாக உள்ள கடன் வாய்ப்பை தேர்வு செய்வது நல்லது. இதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் விசாரித்து பார்க்க வேண்டும். முக்கியமாக கடன் விண்ணப்ப விபரங்கள் முழுவதையும் பொறுமையாக படித்துப் பார்த்து புரிந்து கொள்வது அவசியம்.
மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
நிபந்தனைகள் - Conditions
விகிதம் - Rate
பரிவர்த்தனை - Transaction
விகிதம் - Rate
பரிவர்த்தனை - Transaction
Post a Comment