மலையுச்சி ஏன் வெப்பமாக இல்லை ?
மலையுச்சிகளுக்குப் போகும் போது நாம் சூரியனுக்கு நெருக்கமாவும் செல்கிறோம் . ஆனால் , வெப்பம் அதிகரிப்பதற்கு பதிலாக , குளிர் அதிகரிக்கிறது . இதற்குக் காரணம் என்ன ?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள இடைவெளி 15 கோடி கி . மீ . அப்படிப் பார்த்தால் எவரெஸ்ட் உச்சியில் நாம் ஏறி நின்றாலும் இந்த 15 கோடி கிலோ மீட்டர் இடைவெளில் வெறும் 9 கி . மீ . மட்டுமே குறைந்திருக்கும் . எனவே , சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான இடைவெளியில் எந்த முக்கியமான மாற்றமும் இருக்காது .
காரணம் வேற . . .
மலையுச்சிகளில் நாம் ஏற ஏற , தட்பவெப்பநிலை மாறுவதற்கு முதன்மைக் காரணம் வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருவதுதான் . வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்பநிலையும் குறைந்து கொண்டே வரும் . இப்படிக் குறையும் விகிதம் நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகம் . ஒவ்வொரு 100 மீட்டர் மேலே ஏறினால் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சட்டென்று குறைந்துவிடுகிறது , வளிமண்டல அழுத்தம் குறைவு என்பது வேறொன்றுமில்லை . காற்று மூலக்கூறுகளின் அளவு குறைந்துகொண்டே போவதுதான் வளிமண்டல அழுத்தம் குறைவு . அதனால்தான் மலையுச்சிகளில் போகும் போது மக்கள் சுவாசிக்கக் கஷ்டப்படுகிறார்கள் .
எப்படி சமாளிக்கிறார்கள் ?
வளிமண்டலத்தில் டிராபோபாஸ் ( Tropopause ) எனப்படும் பகுதி இருக்கிறது . இதுவேடிராபோஸ்பியர் , ஸ்டிராட்டோஸ்பியர் ஆகிய வளிமண்டல அடுக்குகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி . பூமிக்கு 12 கி . மீக்கு மேல் உள்ள இந்தப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே வளிமண்டலம் இருக்கிறது . இந்த இடங்களில் எஞ்சியிருக்கும் வளிமண்டலத்தின் அளவு வெறும் 10 சதவீதம்தான் . அதனால் இந்த இடங்களில் காற்றழுத்தம் மிக மோசமாகக் குறைந்துவிடுகிறது . அதனால் வெப்பநிலையும் கடுமையாகக் குறைகிறது . எவ்வளவு என்றால் , மைனஸ் 55 டிகிரி செல்சியஸ்வரை . அப்படியானால் , இந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி விமானத்தில் பயணிக்கிறார்களே , அவர்களுக்கு என்ன ஆகும் ? நவினத் தொழில்நுட்ப உதவி காரணமாக அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை . விமான இன்ஜின்களில் காற்றழுத்தத்தை உருவாக்கும் இயந்திரம் வெளியிடும் காற்று , எரிபொருளுடன் கலப்பதற்கு முன்னதாக பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் சுற்றியுள்ள காற்றை வெப்பப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது . இந்த வெப்பக் காற்று , விமானச் சுவர்களிடையே செய்யப்பட்டுள்ள வெப்பம் கடத்தும் திறன் தடுப்பு , மனித உடல் வெளிவிடும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் விமானத்துக்குள் மனிதர்களுக்கு உகந்த வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது .

Post a Comment