The Story Of A Greedy Dog..!!


Once a dog was waiting near a meat shop in the hope to get by chance a piece of meat. Soon he found an opportunity. The shopkeeper had a good number of customers visiting his shop at a time, and he became busy talking to them and selling meat.



In the meantime, the dog managed to bite a lump of meat from the shop and ran away as fast as possible. He reached the bank of a river and wanted to cross the river by the bridge that was laid over it.

The dog climbed the bridge, and as he came near the middle of it, he saw his own shadow on the bed of the river, which reflected that a dog was standing with a lump of flesh in his mouth.

The dog became greedy and wanted that piece of meat also. So he jumped into the river to catch hold of the meat. And he was soon carried away by the strong current of the river.

Moral: Don′t be greedy.

ஒரு தடவை நாய் ஒன்று இறைச்சி கடைக்கு அருகே தனக்கொரு இறைச்சி துண்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தது. திடீரென்று நாய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்தக் கடைக்காரருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். அவர்களுடன் பேசிக்கொண்டு இறைச்சிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில், நாய் கடையில் இருந்து இறைச்சி துண்டை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி நதியின் கரையை அடைந்து, பாலத்தை கடக்க முயன்றது.

பாலத்தின் மேல் நாய் ஏறிச்சென்று நடுப்பகுதியை அடைந்தவுடன், நதியில் தன்னுடைய சொந்த நிழலைக் கண்டு, மற்றொரு நாய் மாமிசத்துடன் நின்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டது. தண்ணீரில் தன்னுடைய பிரதிபலிப்பு தான் தெரிகிறது என்று அதற்கு புரியவில்லை.

நாய் பேராசை அடைந்து, அந்த இறைச்சியும் தனக்கு வேண்டும் என்று விரும்பி இறைச்சிக்காக ஆற்றில் குதித்தது. ஆற்றின் வெள்ளத்தில் நாய் அடித்துச் செல்லப்பட்டது.

நீதி : பேராசை கொள்ளாதே.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2